இலங்கை
வழிபாட்டிடங்களுக்கு நிதி கணக்காய்வு விசாரணை!
வழிபாட்டிடங்களுக்கு நிதி கணக்காய்வு விசாரணை!
இலங்கையிலுள்ள வணக்கஸ்தலங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் நிதி தொடர்பில் கணக்காய்வு விசாரணை நடத்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது.
பௌத்த, கிறிஸ்தவ, இந்து மற்றும் இஸ்லாம் ஆகிய மதங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து நன்கொடையாகக் கிடைக்கும் நிதி கணக்காய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று சர்வதேச நிதி நிறுவனங்கள் பல உத்தியோகப்பற்றற்ற முறையில் இந்த அரசிடம் கோரிக்கை முன்வைத்து வருகின்றன. அதன் அடிப் படையிலேயே அரசு மேற்படி தீர்மானத்தை எடுத்துள்ளது என்று அரச வட்டாரங்கள் கூறுகின்றன. எனினும் இந்த நிதி பயன்படுத்தப்படுகின்ற விதம் தொடர்பில் சமயத் தலைவர்களுடன் பேச்சு நடத்தியே கணக்காய்வு தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரச வட்டாரங்கள் மேலும் கூறுகின்றன.