சினிமா
விஜய்யை அட்டாக் செய்தாரா அஜித்?.. விமர்சித்து வரும் ரசிகர்கள்
விஜய்யை அட்டாக் செய்தாரா அஜித்?.. விமர்சித்து வரும் ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த குட் பேட் அக்லி திரைப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.இதை தொடர்ந்து மீண்டும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க அஜித் முடிவு செய்துள்ளார். இப்படத்தை பிரபல விநியோகஸ்தரான ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்க உள்ளார்.இந்நிலையில் அஜித் குமார் சினிமாவில் அறிமுகமாகி 33 வருடங்கள் நிறைவுற்றதைத் தொடர்ந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.அதில், தனது ரசிகர்களின் அன்பை அவரது சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். தற்போது இந்த பதிவால் நடிகர் விஜய்யை மறைமுகமாக அஜித் அட்டாக் செய்கிறார் என ரசிகர்கள் பலரும் விமர்சித்து வருகிறார்கள்.