இலங்கை
விபச்சார விடுதி முற்றுகை ; யுவதிகள்- இளைஞர்கள் கைது
விபச்சார விடுதி முற்றுகை ; யுவதிகள்- இளைஞர்கள் கைது
கொழும்பு – மிரிஹான பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாதிவெல பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டது.
இந்த சுற்றிவளைப்பில் 2 யுவதிகள் உட்பட ஐந்து பேர் மிரிஹான பொலிஸாரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (03) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மிரிஹான பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களில் மசாஜ் நிலையத்தின் உரிமையாளரும் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாதுக்கை மற்றும் புடலுஓயா ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 22 மற்றும் 24 வயதுடைய இரண்டு யுவதிகளும் திக்வெல்ல மற்றும் பன்னிப்பிட்டிய ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 22, 25 மற்றும் 33 வயதுடைய மூன்று ஆண்களுமே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மிரிஹான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.