இலங்கை

விபத்தை ஏற்படுத்திய ஜனாதிபதியின் செயலாளர்; ஒரே குடும்பத்தில் நால்வருக்கு நேர்ந்த கதி

Published

on

விபத்தை ஏற்படுத்திய ஜனாதிபதியின் செயலாளர்; ஒரே குடும்பத்தில் நால்வருக்கு நேர்ந்த கதி

   ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் செயலாளர் டாக்டர் நந்திக சனத் குமநாயக்கவின் உத்தியோகபூர்வ கார், மோட்டார் சைக்கிளில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

பெலவத்த-அகுரேகொட சாலையில் உள்ள விமானப்படை தளத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.

Advertisement

விபத்து நடந்த நேரத்தில் ஜனாதிபதியின் செயலாளரின் மனைவியும் சாரதியும் காரில் இருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்து கடந்த 2 ஆம் திகதி இடம்பெற்றுள்ள நிலையில், விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய் மற்றும் 2 மற்றும் 6 வயதுடைய இரண்டு குழந்தைகள் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர் தாயும் இரண்டு குழந்தைகளும் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Advertisement

விபத்து தொடர்பில் கார் சாரதி தலங்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

குறித்த சாரதி, கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சாரதி பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், விபத்தில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு 35,000 ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டதாகவும் கூறப்படுகின்றது,  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version