சினிமா

“ஹவுஸ் மேட்ஸ்” படம் வசூலில் வளர்ச்சி.. சிவகார்த்திகேயன் தயாரிப்பிற்கு இப்டி ஒரு வரவேற்பா?

Published

on

“ஹவுஸ் மேட்ஸ்” படம் வசூலில் வளர்ச்சி.. சிவகார்த்திகேயன் தயாரிப்பிற்கு இப்டி ஒரு வரவேற்பா?

ஆகஸ்ட் 1, 2025 அன்று திரையரங்குகளில் வெளியான “ஹவுஸ் மேட்ஸ்” திரைப்படம், வெளியான சில நாட்களிலேயே தமிழ் சினிமா ரசிகர்களிடம்  நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தின் தயாரிப்பாளராக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் செயற்பட்டுள்ளார்.சிறிய அளவு பட்ஜெட்டிலான திரைப்படமாக வெளியானாலும், “ஹவுஸ் மேட்ஸ்” படத்திற்கு கிடைத்த வரவேற்பும், தற்போது வெளியான உலகளாவிய வசூல் தகவலும் கவனத்தை ஈர்த்துள்ளது.தற்போதைய தரவுகளின்படி, ஹவுஸ் மேட்ஸ் படம் ரூ. 1.8 கோடி வசூல் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு படத்திற்கு சிறந்த தொடக்கமாக industry வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன.தர்ஷன் ஹீரோவாக இப்படத்தில் நடித்துள்ளார். அவர் ஏற்கனவே சில முன்னணி இயக்குநர்களுடனும், பெரிய படங்களில் துணை வேடங்களில் நடித்தும் பிரபலமானவர். இந்தப் படம் மூலம் அவர் ஒரு முழுமையான ஹீரோவாக தன்னை நிலைநிறுத்த முயற்சி செய்துள்ளார்.இவருடன் இணைந்து காளி வெங்கட், மற்றும் தீனா போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களது பாராட்டுக்குரிய நடிப்பு, கதையின் உணர்ச்சிகளை பலப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version