இலங்கை

728 துப்பாக்கி ரவைகளுடன் வவுனியாவில் இருவர் கைது!

Published

on

728 துப்பாக்கி ரவைகளுடன் வவுனியாவில் இருவர் கைது!

கொழும்பில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டவர் வழங்கிய தகவலுக்கு அமைய வவுனியாவில் நேற்றுமுன்தினம் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், நேரியகுளம் பிரதேசத்தில் வீடொன்றில் மறைத்துவைக்கப்பட்டிருந்த 728 துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 21ஆம் திகதி கொழும்பில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அவர் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி என்று பொலிஸ் தரப்புக் கூறுகின்றது. அவரிடமிருந்து பெறப்பட்டதகவல்களுக்கு அமைய கொழும்பில் இருந்து வவுனியா சென்ற புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளும், வவுனியா மாவட்டக் குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவுப் பொலிஸாரும் இணைந்து வவுனியாவில் செட்டிகுளம், துட்டுவாகை மற்றும் நேரியகுளம் பிரதேசங்களில் இரு வீடுகளில் சோதனை மேற்கொண்டிருந்தனர்.

Advertisement

நேரியகுளம் வீடொன்றுக்கு அண்மையில் பிளாஸ்டிக் பீப்பாய் ஒன்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 86 கைக்குண்டுகள், ரி-56 ரகத் துப்பாக்கியின் ரவைகள், கைத்துப்பாக்கிக்கான மூன்று ரவைகள், 5 ஆயிரத்து 600 போதை மாத்திரைகள், 10 கிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன மீட்கப்பட்டன என்றும், 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர் என்றும் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இந்தநிலையில் கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கமைய செட்டிகுளம், நேரியகுளம் பிரதேசத்தில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 728 துப்பாக்கிறவைகள் நேற்றுமுன்தினம் மீட்கப்பட்டுள்ளன என்றும், இந்தச் சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர் என்றும் கூறப்படுகின்றது. கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர் செட்டிகுளம் பிரதேசசபை உறுப்பினரின் சகோதரர் என்று பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச்சம்பவம் தொடர்பில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version