இந்தியா
ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காத அதிகாரிகள்: சட்டமன்றத்தை முற்றுகையிட்ட சுயேச்சை எம்.எல்.ஏ
ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காத அதிகாரிகள்: சட்டமன்றத்தை முற்றுகையிட்ட சுயேச்சை எம்.எல்.ஏ
புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட கோவிந்தசாலை முடக்கு மாரியம்மன் கோவில் வீதி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்களில் சிலர் இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தகவல் அறிந்த உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், சுயேச்சை எம்.எல்.ஏ-வுமான நேரு (எ) குப்புசாமி, முடக்கு மாரியம்மன் கோவில் வீதியில் சுகாதாரத் துறை மருத்துவர்கள் ஊழியர்கள் மூலம் இன்று காலை 7:00 மணி முதல் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது, பிரச்சினைகள் பற்றி பேசுவதற்காக மிக அவசரமாக சுகாதாரத்துறை இயக்குனர் செவ்வேல், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் வீரசெல்வம், புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்துவதற்காக இருந்தது. இதில் சில அதிகாரிகள் வரவில்லை. இந்நிலையில்,’அவசரம் தெரியாத அதிகாரிகள் அலட்சியமாக இருக்கிறீர்கள். முதல்வர், அமைச்சர்களை சந்தித்து இது பற்றி முறையிடுகிறேன் என்று கூறி சட்டசபையில் வாயில் பகுதியை சுயேச்சை எம்.எல்.ஏ நேரு முற்றுகையிட்டார். இதனை அறிந்த பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் வீரச்செல்வம் மற்றும் புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி துறை அதிகாரிகளும் உடனடியாக சட்டசபை வாயில் பகுதிக்கு விரைந்து மேற்கண்ட பிரச்சனைகளுக்கு நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும் என உறுதி அளித்து ஆலோசனை கூட்டத்திற்கு அழைத்து சென்றனர். செய்தி: பாபு ராஜேந்திரன் – புதுச்சேரி.