உலகம்

இந்தியா மீதான டிரம்பின் குற்றச்சாட்டு தவறானது!

Published

on

இந்தியா மீதான டிரம்பின் குற்றச்சாட்டு தவறானது!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தங்கள் நாட்டுடன் உலக நாடுகள் வரி விதிப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். ஜூலை இறுதி வரை காலக்கெடு நிர்ணயித்திருந்தார். 

இந்த காலக்கெடுவுக்குள் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ளவில்லை என்றால், அந்தந்த நாட்டில் இருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு வரி விதிக்கப்படும் என வலியுறுத்திருந்தார்.

Advertisement

அமெரிக்கா- இந்தியா இடையில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படவில்லை. இதனால் 25 சதவீதம் வரி விதிக்கப்படுவதாக டிரம்ப் அறிவித்தார்.அத்துடன் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என அவர் எச்சரித்தார்.

ஆனால், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தவில்லை. இந்த நிலையில், இந்தியா ரஷ்யாவிடம் இருந்து ரஷ்யா பணத்திற்கு அதிக அளவில் கச்சாய் எண்ணெய் மட்டும் வாங்கவில்லை. அதிக அளவில் எண்ணெய் கொள்முதல் செய்து, அதிக லாபத்திற்கு ஓபன் மார்க்கெட்டில் விற்பனை செய்து வருகிறது.

ரஷ்யா தாக்குதலில் உக்ரைனில் எவ்வளவு மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள் என்பது அவர்களுக்கு கவலை இல்லை. இதன் காரணமாக நான் இந்தியாவுக்கு எதிராக வரி விதிப்பை கணிசமான அளவில் உயர்த்த இருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement

இந்நிலையில், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கி இந்தியா, பெரிய லாபத்திற்கு விற்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டிய நிலையில், அது முற்றிலும் தவறானது என சர்வதேச வர்த்தக ஆராய்ச்சி அமைப்பான GTRI விளக்கம் அளித்துள்ளது.

மேலும், ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயரும் என எச்சரிக்கை எனவும் GTRI தெரிவித்துள்ளது.[ஒ]

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version