இலங்கை

காவல்துறைமா அதிபர் பதவியிலிருந்து தேசபந்துவை நீக்க பரிந்துரை

Published

on

காவல்துறைமா அதிபர் பதவியிலிருந்து தேசபந்துவை நீக்க பரிந்துரை

தேசபந்து தென்னகோனை, காவல்துறைமா அதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்கான யோசனையை நிறைவேற்றுவது தொடர்பில் நாடாளுமன்றில் இன்று விவாதிக்கப்படவுள்ளது.

2002 ஆண்டின் 5ஆம் இலக்க அலுவலர்களை அகற்றுதல் சட்டத்திற்கு அமைய இந்த விவாதம் நடத்தப்படவுள்ளது.

Advertisement

இதற்கமைய, குறித்த யோசனை மீதான வாக்கெடுப்பு இன்று பிற்பகல் 4 மணியளவில் நடத்தப்படுமென நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

விசாரணைகளுக்காகச் சபாநாயகரால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கைக்கு அமைய, தேசபந்து தென்னகோன் தவறிழைத்துள்ளமை உறுதியாகியுள்ளது.

இதற்கமைய, தேசபந்து தென்னகோனை காவல்துறைமா அதிபர் பதவியிலிருந்து நீக்குவது பொருத்தமானது என்றும் குறித்த குழு பரிந்துரைத்திருந்தது.

Advertisement

காவல்துறைமா அதிபராக பணியாற்றிய போது அவர், தமது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாகவும், கடமைகளுக்குப் புறம்பாகச் செயற்பட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version