பொழுதுபோக்கு

கேப்டனுக்கு மகள்; தனக்கு அண்ணனாக நடித்தவரை திருமணம் செய்தவர்: இந்த சிறுமி யார் தெரியுமா?

Published

on

கேப்டனுக்கு மகள்; தனக்கு அண்ணனாக நடித்தவரை திருமணம் செய்தவர்: இந்த சிறுமி யார் தெரியுமா?

முன்னணி நடிகராக இருந்த விஜயகாந்த், 1990-ம் ஆண்டு நடித்த படம் சத்ரியன். இந்த படத்தின் ஒரு மகன் ஒரு மகள் என 2 குழந்தைகளுக்கு அப்பாவாக நடித்திருந்தார் விஜயகாந்த். இந்த படத்தில் அவரது மகளாக நடித்த சிறுமி இன்றைக்கு காமெடி நடிகையாக வலம் வருகிறார்.தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி முத்திரை பதித்த கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் கடந்த 1990-ம் ஆண்டு வெளியான படம் சத்ரியன். முன்னணி நடிகராக இருந்தாலும் மணிரத்னம் இயக்கத்தில் விஜயகாந்த நடிக்கவில்லை. ஆனாலும் சத்ரியன் படத்திற்கு கதை திரைக்கதை எழுதியது மணிரத்னம் தான். இயக்குனர் கே.சுபாஷ் இந்த படத்தை இயக்கியிருந்தார்.இந்த படத்தில், விஜயகாந்துடன் ரேவதி, பானுபிரியா, விஜயகுமார், வி.கே.ராமசாமி, டெல்லி கணேஷ், உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மலையாள நடிகர் திலகன் வில்லன் வேடத்தில் அசத்திய இந்த படத்தில் அவர்,  விஜயகாந்தை பார்த்து வரணும் ‘’நீ பழைய பன்னீர்செல்வமா திரும்பி வரணும்’’ என்று சொல்லும் வசனம் இன்றும் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது. படம் வெளியாகி 35 வருடங்கள் கடந்தாலும், இந்த படம் இன்றும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கக்கூடிய ஒரு படமாக நிலைத்திருக்கிறது.A post shared by AarthiGaneshkar (@aarthiganeshkar)இந்த படத்தில், விஜயகாந்த் மகள் கேரக்டரில் நடித்த சிறுமி, தனது சிறப்பான நடிப்பின் மூலம் பலரின் கவனத்தை ஈர்த்திருப்பார். அந்த சிறுமி யார் தெரியுமா? அந்த நடிகை வேறு யாரும் இல்லை. நடிகை ஆர்த்தி கணேஷ் தான். கே.பாலச்சந்தர் தயாரிப்பில் அமீர்ஜான் இயக்கத்தில் வெளியான வண்ண கனவுகள் தான் இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான முதல் திரைப்படம். கார்த்திக் மற்றும் முரளி இந்த படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.1987-ம் ஆண்டு வெளியான இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில், அடுத்து டி.ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான என் தங்கை கல்யாணி, மணரத்னம் இயக்கத்தில் அஞ்சலி, உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். ஹரி இயக்கத்தில் வெளியான அருள் படத்தில், ஜோதிகாவின் தங்கையாக நடித்திருந்த இவர், அடுத்து தனுஷ் நடிப்பில் குட்டி, உத்தமபுத்திரன், உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். கடைசியாக வனிதா இயக்கத்தில் வெளியான மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலும், வனிதாவின் தங்கையாக நடித்திருந்தார்.இவரது கணவர் கணேஷூம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சினிமாவில் நடித்தவர். என் தங்கை கல்யாணி படத்தில் ஆர்த்தி கணேஷ் இருவரும் அண்ணன் தங்கையாக நடித்திருந்த நிலையில், தற்போது இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்து வருகின்றனர். மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் சில வெற்றிப்படங்களில் நடித்த்துள்ளார். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version