இலங்கை

தேசிய பூங்காவில் தோல் உரிக்கப்பட்ட சிறுத்தையின் சடலம் மீட்பு

Published

on

தேசிய பூங்காவில் தோல் உரிக்கப்பட்ட சிறுத்தையின் சடலம் மீட்பு

  மாதுரு ஓயா தேசிய பூங்காவில் தோல் உரிக்கப்பட்ட சிறுத்தையின் சடலம் ஒன்று நேற்று (04) வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

லியோபோகான் (LEOPOCON Sri Lanka) எனப்படும் இலாப நோக்கற்ற அமைப்பு எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பதிவின் அடிப்படையிலேயே சிறுத்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

Advertisement

மாதுரு ஓயா தேசிய பூங்காவில் இந்த சிறுத்தையின் சடலம் கிடந்ததாகவும், இவ் வருடத்தின் நடுப்பகுதி வரை 14 சிறுத்தைகள் வேட்டையாடப்பட்டுள்ளது என லியோபோகான் என தெரிவித்துள்ளது.

அதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்பு கொத்மலை, கட்டுகித்துல பகுதியில் ஒரு வயதான ஆண் சிறுத்தை இறந்து கிடந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version