பொழுதுபோக்கு
பாட்டு ரொம்ப பிரமாதம்; நீதான் வம்சத்தை வளர்க்க போறியா? கலைஞரிடம் பரிசு வாங்கிய பாண்டிராஜ்!
பாட்டு ரொம்ப பிரமாதம்; நீதான் வம்சத்தை வளர்க்க போறியா? கலைஞரிடம் பரிசு வாங்கிய பாண்டிராஜ்!
தனது இயக்கத்தில் 2-வது படம் வெளியாகும் முன்பே அந்த படத்தின் பாடலை கேட்டு, பாராட்டி தனக்கு ஒரு பேனாவையும் பரிசாக அளித்த கலைஞர் கருணாநிதி இந்த படத்திற்கு இந்த டைட்டில் வேண்டாம் என்று சொன்னதாக இயக்குனர் பாண்டிராஜ் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.தமிழ் சினிமாவில் குழந்தைகளை வைத்து திரைப்படங்கள் இயக்கி வெற்றி கண்ட இயக்குனர் பாண்டிராஜ். 2009- ம் ஆண்டு இவர் இயக்கிய பசங்க திரைப்படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதன்பிறகு, வம்சம், மெரினா, கேடி பில்லா, கில்லாடி ரங்கா, பசங்க 2, இது நம்ம ஆளு, கதக்களி, கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டு பிள்ளை என தொடர் வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக வலம் வந்தார்கடைசியாக கடந்த 2022-ம் ஆண்டு சூர்யா நடிப்பில் எதற்கும் துணிந்தவன் என்ற படத்தை இயக்கியிருந்தார். பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் பெரிய வெற்றியை பெறும் என்று பலரும் நினைத்தனர். ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக இந்த படம் வீழ்ச்சியை சந்தித்தது. அதன்பிறகு படங்கள் இயக்காத பாண்டிராஜ் 3 வருட இடைவெளிக்கு பிறகு, விஜய் சேதுபதி நித்யா மேனன் நடிப்பில் தலைவன் தலைவி என்ற படத்தை இயக்கியுள்ளார்.கடந்த ஜூலை 25-ந் தேதி வெளியான இந்த படம் பெரிய வெற்றியை பெற்று ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் விமர்சன ரீதியாக பாராட்டுக்களை பெற்று வரும் இந்த தலைவன் தலைவி திரைப்படம் 3 ஆண்டுகள் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி என்று இயக்குனர் பாண்டிராஜ் கூறியுள்ளார். இதனிடையே தற்போது பாண்டிராஜின் பழைய நேர்காணல் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் அவர் வம்சம் படம் பற்றியும் கலைஞர் கருணாநிதி பற்றியும் கூறியுள்ளார்,வம்சம் படம் வெளியாகும் முன்பே, அந்த படத்தின் ஒரு பாடலை கேட்ட கலைஞர் கருணாநிதி பாராட்டிவிட்டு, ஒரு பேனாவை பரிசாக கொடுத்தார். இந்த பேனாவை இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறேன். ஆரம்பத்தில் அதில் இன்க் போட்டு எழுதிக்கொண்டு இருந்தேன். ஆனால் இப்போது அதில் எழுதுவதில்லை. இந்த படத்திற்காக முதன் முதலில் அவரை சந்தித்தபோது, வாயா நீதான் வம்சத்தை வளர்க்க போறீயா என்று கேட்டார். அதன்பிறகு படத்தின் கதையை கேட்டு, அதில் வரும் வம்சத்தின் பெயர்களை வைத்து எங்கள் ஊரில் விசாரிக்க சொல்லி இருக்கிறார். இன்டலிஜெண்ட்ஸ் என்னையும், படத்தின் வரும் பெயர்களையும் விசாரித்துள்ளனர்.நீதான் வம்சத்தை வளர்க்கப்போகிறாயா? 😂😂😂#KalaignarForever pic.twitter.com/CwFCqyIaaiஅதன்பிறகு படத்தின் கதைக்காக அவரை 13-14 முறை சந்தித்திருக்கிறேன் கதையை கேட்ட அவர், நல்லா இருக்கு, ஆனா இந்த டைட்டில் வேண்டாம். வேற மாற்றிக்கொள்ளுங்கள் என்று சொல்ல, பாண்டிராஜ் எனக்கு இந்த டைட்டில் பிடித்திருக்கிறது என்று அருள்நிதியிடம் கூறியுள்ளார். அதன்பிறகு அவர், கலைஞரின் மகள் செல்வியிடம் பேசி இந்த டைட்டிலை வைத்துக்கொள்ள கலைஞரிடம் பேசியுள்ளார். இதை பார்த்த அருள்நிதி, தாத்தாவையே கன்வின்ஸ் பண்ணிட்டீங்களே சார் என்று கூறியுள்ளார்.அதன்பிறகு படம் வெளியானதை தொடர்ந்து 2 முறை கலைஞர் கருணாநிதி படத்தை பார்த்துள்ளார். அப்போது அவர் முதல்வராக இருந்தாலும், நேரம் எடுத்து 2 முறை பார்த்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. படம் வெளியானபோது தான் வாகை சந்திரசேகர், இந்த படத்தில் வரும் வம்சத்தின் பெயரையும், உங்களை பற்றியும், விசாரித்தோம் உங்களுக்கு தெரியுமா என்று கேட்டார் என்று பாண்டிராஜ் கூறியுள்ளார்.