இந்தியா

புதுச்சேரி கல்வி, அலுவலகங்களில் தமிழ் புறக்கணிப்பு? ஆளுநரிடம் தமிழ் உரிமை இயக்கம் மனு

Published

on

புதுச்சேரி கல்வி, அலுவலகங்களில் தமிழ் புறக்கணிப்பு? ஆளுநரிடம் தமிழ் உரிமை இயக்கம் மனு

புதுச்சேரியில், ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை தமிழ் வழியில் கல்வியை வழங்க வேண்டும், மேலும் அரசு அலுவலகங்களில் தமிழை அலுவல் மொழியாகப் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி, புதுச்சேரி தமிழ் உரிமை இயக்கம் சார்பில் துணைநிலை ஆளுநரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி தமிழ் உரிமை இயக்கம் சார்பில் அதன் தலைவர் பாவாணன் பொதுச் செயலாளர் மங்கையர் செல்வன் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் துணைநிலை ஆளுநர் மாளிகையில் ஆளுநர் கைலாசநாதனை சந்தித்து மனு அளித்தனர்.அந்த மனுவில், ‘புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வியை வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ஆட்சி மொழி சட்டம் 1965 படி புதுச்சேரி மாநிலங்களில் உள்ள அரசு அலுவலகங்களில் தாய் மொழியை அலுவல் மொழியாக பயன்படுத்த வேண்டும்’, என குறிப்பிட்டிருந்தது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ் உரிமை இயக்க தலைவர் பாவாணன், ‘புதிய கல்விக் கொள்கையின் படி மாநில மொழியில் பாடம் நடத்த வேண்டும் என்று விதிமுறைகள் இருக்க அதனை மீறி தமிழை புறக்கணித்து மற்ற மொழிகளை மாணவர்கள் மத்தியில் திணிப்பதாக குற்றம் சாட்டிய அவர்,கடை மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர் பலகையில் தமிழ் முதன்மையானதாக இருத்தல் வேண்டும்’, எனவும் வலியுறுத்தினார்.செய்தி: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version