இலங்கை
புலம்பெயர் புலிகளால் மஹிந்தவுக்கு ஆபத்து; பூச்சாண்டி காட்டுகிறார் சாகர!
புலம்பெயர் புலிகளால் மஹிந்தவுக்கு ஆபத்து; பூச்சாண்டி காட்டுகிறார் சாகர!
புலம்பெயர் புலிகளால் மஹிந்த ராஜபக்ச இலக்குவைக்கப்பட்டுள்ளார். அவர்களின் வேண்டுகோளுக்கு அமையவே மஹிந்தவின் பாதுகாப்பு ஏற்பாடுகள் அரசாங்கத்தால் நீக்கப்படுகின்றன என்று பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலர் சாகர காரியவசம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை இரத்துச் செய்வதற்கு அரசாங்கம் தயாராகி வருகின்றது. இதற்குரிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அரசியற் பழிவாங்கல் மற்றும் குரோத நோக்கு என்பவற்றின் அடிப்படையிலேயே முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய சலுகைகள் தற்போதைய அரசாங்கத்தால் இரத்துச்செய்யப்படவுள்ளன.
புலம்பெயர் புலிகளின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தான் அரசாங்கம் செயற்படுகின்றது. அரசாங்கத்தின் இந்த முடிவால், எதிர்காலத்தில் போர் ஏற்பட்டால் கூட முதுகெலும்புடன் செயற்படக்கூடிய தலைவர் உருவாவதை தடுக்கும் நோக்கமும் இதன் பின்னணியில் உள்ளது- என்றார்.