இலங்கை

பொலிஸ் அதிகாரி மீது கொலைவெறித் தாக்குதல் ; ஆயுதமேந்திய குழு அட்டகாசம்

Published

on

பொலிஸ் அதிகாரி மீது கொலைவெறித் தாக்குதல் ; ஆயுதமேந்திய குழு அட்டகாசம்

களுத்துறை, எகொட உயன பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவர் ஆயுதமேந்திய குழுவொன்றின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

இச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

Advertisement

நாகொட, வெனிவெல்கொட பகுதியில் உள்ள தனது வீட்டிலிருந்தபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

வாள்கள் மற்றும் தடிகளுடன் ஆயுதமேந்திய பத்து பேர் கொண்ட குழு அந்தப் பொலிஸ் அதிகாரியைத் தாக்கியுள்ளது.

இத்தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி களுத்துறை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

அப்பகுதியில் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டுவதற்கு நடவடிக்கை எடுத்திருந்ததால் ஆத்திரமடைந்த குழுவினர் இந்தத் தாக்குதலை நடத்தியதாக விசாரணையில் தெரியவருகின்றது. 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version