இலங்கை

யானை தாக்குதலில் இளம் தாய் உயிரிழப்பு!

Published

on

யானை தாக்குதலில் இளம் தாய் உயிரிழப்பு!

மட்டக்களப்பு – மகிழவெட்டுவான் பகுதியில் யானைத் தாக்குதலில் இளம் தாய் ஒருவர் உயிரிழந்ததுடன், அவரது பெண் குழந்தை தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளது.

இந்த சம்பவம் நேற்று இரவு நடைபெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

உயிரிழந்த பெண் மகிழவெட்டுவானைச் சேர்ந்த 35 வயதுடைய ரவிச்சந்திரன் பசுபதி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் உள்ள வீட்டு முற்றத்தில் நேற்று இரவு 7.00 மணியளவில் தனது மூன்று வயது பெண் குழந்தையுடன் தாய் இருந்தபோது, வீட்டிற்குள் புகுந்த யானை அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. 

இதில் தாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், குழந்தை தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளது. 

Advertisement

இதனையடுத்து, பொலிஸார் உயிர் தப்பிய குழந்தையை மீட்டதுடன், உயிரிழந்த தாயின் சடலத்தை மீட்டு மட்டக்களப்பு போதனா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.[ஒ]

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version