சினிமா

ரஜினியின் மனிதநேயம் அசத்தல்.! ரஜினி பற்றிய சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்த நாகார்ஜுனா..!

Published

on

ரஜினியின் மனிதநேயம் அசத்தல்.! ரஜினி பற்றிய சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்த நாகார்ஜுனா..!

இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தென் இந்தியா முழுக்க ரசிகர்களை கொண்ட லோகேஷ் கனகராஜ் இணையும் புது படம் தான் ‘கூலி’. இந்தப் படம், மாபெரும் நட்சத்திரக் கூட்டணியுடன் உருவாகி, ஆகஸ்ட் 14ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.படத்தின் கதை, இசை, நடிப்புப் பட்டாளம், டெக்னிக்கல் குழுவின் வேலைப்பாடுகள் என அனைத்தும் ரசிகர்களை மிகுந்த எதிர்பார்ப்பில் வைத்திருக்கின்றன.’மாஸ்டர்’, ‘விக்ரம்’ போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ், தற்போது கூலியை இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் முக்கியமான விடயம், இது ரஜினிகாந்த் அவர்களின் சினிமா பயணத்தில் புது மைல்கல்லாக இருக்கும் என்று ரசிகர்கள் நம்புவது தான். படத்தில், ரஜினிகாந்த், நாகார்ஜுனா மற்றும் ஸ்ருதி ஹாசன் எனப் பலர் இணைந்து நடித்துள்ளனர். ஆகஸ்ட் 2ம் தேதி சென்னையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் பாடல்கள், ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. முக்கியமாக, ‘சிக்கிட்டு’ எனும் பாடல், அனிருத்தின் இசையில் ரஜினியின் ஸ்வாக்-ஐ கொண்டாடும் வகையில் அமைந்துள்ளது.’கூலி’ படம் பான் இந்தியாவாக உருவாகி வரும் படமாக இருப்பதால், தெலுங்கு புரமோஷன் நிகழ்ச்சி நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் தவிர மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.இந்த நிகழ்ச்சியின் போது நாகார்ஜுனா, “கூலி படத்தின் கடைசி நாள் ஷுட்டிங்கில், ரஜினி சார் மிகுந்த எளிமையுடன், அந்தப் படத்தில் பணியாற்றிய சுமார் 350 தொழிலாளர்களை அழைத்து, அவர்களின் கைகளில் பணம் கொடுத்து, உங்கள் குழந்தைகளுக்காக ஏதாவது வாங்கி செல்லுங்கள், உங்கள் வீட்டிற்கு ஒரு சந்தோசம் கொண்டு போங்கள் என்று சொன்னார். நான் இதை பார்த்ததும் மனசில நெருடலாக இருந்தது.” என்றார். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version