இலங்கை

வடக்கில் இனவாதத்துக்கு முற்றுப்புள்ளிவேண்டும்; அமைச்சர் பிமல் தெரிவிப்பு!

Published

on

வடக்கில் இனவாதத்துக்கு முற்றுப்புள்ளிவேண்டும்; அமைச்சர் பிமல் தெரிவிப்பு!

நாம் ஆட்சிக்கு வந்து தெற்கில் இனவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளோம். அதேபோன்று வடக்கிலும் இனவாதம் முடிவுக்கு வரவேண்டும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
நாம் தெற்கில் அரசியல் செய்தது போல் வடக்கில் செய்யவில்லை. 2010ஆம் ஆண்டுக்குப் பிறகு தான் நாம் வடக்கில் அரசியல் செய்யத் தொடங்கினோம். எம்மை அங்கு அரசியல் செய்வதற்கு மஹிந்த ராஜபக்ச அரசு அனுமதிக்கவில்லை. கடும் தொல்லை தந்தார்கள். எமது கட்சியின் உறுப்பினர்கள் லலித், குகன் கடத்தப்பட்டார்கள். வடக்கு மக்கள் நூறு வருடங்களாகச் செய்தது விடுதலை அரசியல். அந்த அரசியலை வைத்து வடக்கு தமிழ்க் கட்சிகள் அந்த மக்களை ஏமாற்றி அரசியல் செய்துவந்தன. இப்போது அந்த மக்கள் இந்த ஏமாற்றத்தை உணர்ந்து எம்மோடு கைகோத்துள்ளனர். எமது நேர்மையான கொள்கையை அந்த மக்கள் ஏற்றுள்ளார்கள். வடக்கில் பெரும் அபிவிருத்திகளைச் செய்வதற்கு நிதி ஒதுக்கியுள்ளோம். அங்குள்ள அரசியற்கட்சிகள் இன்னும் இனவாதத்தைக் கையில் எடுத்துள்ளன. ஆனால், மக்கள் அதை நிராகரித்துக்கொண்டுவருகின்றனர். கறுப்பு ஜூலை போன்ற மோசமான சம்பவங்கள் எதுவும் இனி நடக்கக்கூடாது. எல்லோரும் இலங்கையர்கள் என்ற அடிப்படையில் ஒற்றுமையாக வாழவேண்டும். எல்லோரும் ஒன்று சேர்ந்து இந்த நாட்டைக் கட்டியெமுப்ப வேண்டும். இந்த நாடு எல்லா இனமக்களும் சொந்தமானது- என்றார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version