இலங்கை

வவுனியாவில் இளைஞன் ஒருவர் கைது!

Published

on

வவுனியாவில் இளைஞன் ஒருவர் கைது!

வவுனியாவில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில் இளைஞர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

 வவுனியா, சோயா வீதியில் உள்ள வீடு ஒன்றில் ஒரு வாரத்திற்கு முன் திருட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தது. குறித்த சம்பவம் தொடர்பில் குறித்த வீட்டில் வசித்து வந்தவர்கள் வவுனியா தலைமை பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்தனர்.

Advertisement

 குறித்த முறைப்பாட்டுக்கு அமைய வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயக்கொடி அவர்களின் வழிகாட்டலில் குற்றத்தடுப்பு பிரிவைச் சேர்ந்த உப பொலிஸ் பரிசோதகர் சமரவீர, பொலிஸ் சார்ஜன்டுகளான திசாநாயக்கா, திலீப், ஜெயதுங்க, உபாலி, உடுவெல்ல உள்ளிட்ட பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

 இதன்போது வவுனிய, ஓமந்தை, புதியவேலர் சின்னக்குளம் பகுதியில் வசிக்கும் 33 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தாலிக்கொடி, சங்கிலி, காப்பு, மோதிரம் உள்ளிட்ட 66 இலட்சத்து 33 ஆயிரத்து 800 ரூபாய் பெறுமதியான 25 அரைப் பவுண் நகைகள் மீட்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளின் பின் குறித்த இளைஞரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version