பொழுதுபோக்கு
ஹீரோயின் இல்லாம 20 நாள் ஷூட் போச்சு; நஸ்ரியா போய் நயன்தாரா வந்தது எப்படி? ‘இது நம்ம ஆளு’ ப்ளாஷ்பேக்!
ஹீரோயின் இல்லாம 20 நாள் ஷூட் போச்சு; நஸ்ரியா போய் நயன்தாரா வந்தது எப்படி? ‘இது நம்ம ஆளு’ ப்ளாஷ்பேக்!
தமிழ் சினிமாவில் ஒரு ஹீரோ ஹீரோயின் ஒரு திரைப்படத்தில் இணைந்து நடிக்கும்போது காதல் ஏற்படுவது வழக்கம். ஆனால் இந்த காதல் திருமணத்தில் முடிவதும், அல்லது பாதியில் இருவரும் விலகுவதும் அவர்கள் முடிவில் தான் இருக்கிறது. அப்படி பிரிந்தாலும், ரசிகர்கள் மத்தியில் அடிக்கடி பேசப்படக்கூடிய ஜோடியாக சிலர் மட்டுமே இருப்பார்கள். அந்த வகையிலான ஒரு ஜோடி தான் சிம்பு – நயன்தாரா.2003-ம் ஆண்டு மலையாள சினிமாவில் அறிமுகமாகி, 2005-ம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளியான அய்யா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நயன்தாரா. தனது 2-வது படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்த இவர், அடுத்து விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். விஜய் சேதுபதி, ஜெயம்ரவி ஆகியோருடனும் நடித்துள்ளார்.அந்த வரிசையில் கடந்த 2006-ம் ஆண்டு சிம்புவுடன் இணைந்து வல்லவன் என்ற படத்தில் நயன்தாரா நடித்திருந்தார். சிம்புவே இயக்கிய இந்த படத்தில், சந்தானம், ரீமாசென், காதல் சந்தியா, பிரேம்ஜி, எஸ்.வி.சேகர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில், சிம்பு – நயன்தாரா ஜோடிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பும் கிடைத்தது. இந்த படத்தின் படப்பிடிப்பில் இருவருக்கும் இடையே காதலும் மலர்ந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் இவர்கள் பிரிந்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியானது.அதன்பிறகு நயன்தாரா, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களில் பிஸியாக நடித்து வந்த நிலையில், சிம்புவும் பல முன்னணி இயக்குனர்களுடன் இணைந்து வெற்றிப்படங்களை கொடுத்து வந்தார். வல்லவன் படத்தில் இணைந்த இந்த ஜோடி மீண்டும் இணைந்து நடிக்குமா என்ற கேள்வியும் பலருக்கும் எழுந்தது. அந்த வகையில் இந்த ஜோடியை மீண்டும் இணைத்தவர் தான் இயக்குனர் பாண்டிராஜ். கடந்த 2016-ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் மீண்டும் இருவரும் இணைந்தது எப்படி என்பது குறித்து டூரிங் டாக்கீஸ் நிகழ்ச்சியில் கூறியுள்ளார். இந்த படத்தின் கதையை எழுதி முடித்தவுடன், உடனடியாக ஷூட்டிங் சென்றுவிட்டோம். படத்தில் முதலில் ஹீரோயின் இல்லால், 20 நாட்கள் படப்பிடிப்பு நடத்திவிட்டோம். ஹீரோயின் யார்னே தெரியாமல் என்னை தினமும் போன் பேச வைக்கிறீங்களே சார் என்று சிம்புவே சொல்வார். இந்த படத்தின் ஷுட்டிங் நேரத்தில் ராஜா ராணி படம் வெளியானது. அதனால் நஸ்ரியாவை நடிக்க வைக்க திட்டமிட்டோம். அதன்பிறகு ஒரு கட்டத்தில் நயன்தாரா நடித்தால் எப்படி இருக்கும் என்று யோசித்தேன். இதை சிம்புவிடம் கேட்டபோது அவங்க நடிக்கிறேன்னு சொன்ன எனக்கு ஓகே என்று சொன்னார்.இந்த நேரத்தில் இது கதிர்வேலின் காதல் பட ஷூட்டிங்கில் நயன்தாரா இருந்தார். அந்த படத்தின் கேமராமேன் பாலசுப்பிரமணியம் தான் இது நம்ம ஆளு படத்தின் கேமராமேன். அவரை வைத்து பேசியபோது கதை நல்ல இருந்தா நான் பண்றேன் என்று சொன்னார். அதன்பிறகு அவரிடம் போனில் கதை சொன்னேன். கதையை கேட்ட சிரித்த அவர் கண்டிப்பா பண்றேன் என்று சொன்னார். இப்படித்தான் இந்த ஜோடி மீண்டும் இணைந்தது என்று கூறியுள்ளார்.