இலங்கை
76 சூட்டுச் இதுவரை 41 பேர் சாவு சம்பவங்கள்!
76 சூட்டுச் இதுவரை 41 பேர் சாவு சம்பவங்கள்!
இந்த ஆண்டில் கடந்த 3 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 76 துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களில் 41 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 43 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாத்தறையில் நடந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்திலும், அம்பலாந்தோட்டை, பிங்கம பிரதேசத்தில் கடந்த சனிக்கிழமை நடந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்திலும் தலா ஒருவர் காயமடைந்துள்ளனர்.