சினிமா
அதை பார்த்து கமெண்ட் அடிக்கிறார்கள்.. சீரியல் நடிகை கேப்ரில்லா ஆதங்கம்
அதை பார்த்து கமெண்ட் அடிக்கிறார்கள்.. சீரியல் நடிகை கேப்ரில்லா ஆதங்கம்
விஜய் தொலைக்காட்சியில் பாப்புலர் ஷோக்களில் ஒன்றான நடன நிகழ்ச்சியில் நுழைந்து, பின் சீரியல்களில் கால் பதித்து ரசிகர்களின் பேராதரவை பெற்றவர் நடிகை கேப்ரியல்லா.இவர் விஜய் டிவியில் கடைசியாக ஈரமான ரோஜாவே 2 தொடரில் நாயகியாக நடித்திருந்தார். தற்போது சன் டிவியில் மருமகள் என்ற தொடரில் நடித்து வருகிறார்.இந்நிலையில், தன் உடல் எடை குறித்து கேப்ரியல்லா பேட்டி ஒன்றில் பகிர்ந்த விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.அதில், ” அனைவரும் உடற்பயிற்சி நிலையத்துக்கு உடல் எடையை குறைக்கத்தான் போவார்கள். நான் உடல் எடையை அதிகரிக்க சென்றேன். குண்டாக வேண்டும் என்று ஒரு நாளைக்கு 10 இட்லி சாப்பிட்டு இருக்கிறேன்.அதனால் ஓவர் குண்டாகி விட்டேன். இப்போது உடலை குறைத்து விட்டேன். நான் எந்த உடை அணிந்தாலும் அதை பார்த்து மற்றவர்கள் கமெண்ட அடிக்க தான் போகிறார்கள். அனைவரின் பார்வையும் தவறாக மாறிவிட்டதால் கஷ்டப்பட்டு உடல் எடையை குறைத்தேன்” என்று தெரிவித்துள்ளார்.