உலகம்
அமெரிக்கா-பாகிஸ்தான் உறவு தொடர்பில் சீன நிபுணர்கள் கருத்து!
அமெரிக்கா-பாகிஸ்தான் உறவு தொடர்பில் சீன நிபுணர்கள் கருத்து!
பாகிஸ்தான் உடனான நட்பை மேம்படுத்திக் கொள்ள அமெரிக்கா முயற்சி செய்து வருகிறது.
பாகிஸ்தானுக்கு மிகவும் நெருக்கமான நாடாக சீனா இருந்து வருகிறது.
பல பில்லியன் டொலர் அளவிலான கூட்டுத் திட்டங்களை பாகிஸ்தானில் சீனா செயல்படுத்தி வருகிறது.
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான சமீபத்திய போரில் சீனா பாகிஸ்தானுக்கு பெருமளவில் உதவியது.
இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா குரல் கொடுத்தது.
இந்த நிலையில் தான் பயங்கரவாதத்திற்கு எதிரான பாகிஸ்தான் நடவடிக்கையை அமெரிக்கா பாராட்டியுள்ளது.
இதுவரை இல்லாத அளவிற்கு பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீருக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விருந்தளித்தார்.
இந்தியா- பாகிஸ்தான் போரை தான் நிறுத்தியதாக டிரம்ப் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.பாகிஸ்தான் உடனான அமெரிக்காவின் நெருக்கம் இந்தியா, சீனா மற்றும் மத்திய கிழக்குப் பகுதியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சீனாவை விலையாக கொடுத்து, அமெரிக்கா உடனான உறவை பாகிஸ்தான் வளர்க்காது எனவும் சீன நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் சீனாவின் உலகளாவிய செல்வாக்கைக் கட்டுப்படுத்துவதற்கான உத்தி வரம்பை பாகிஸ்தான் புரிந்து கொள்கிறது.
சீனா உடனான நட்பை விலையாக கொடுத்து பாகிஸ்தான் அமெரிக்கா உடனான நட்பை வளர்க்காது.
பாகிஸ்தானை எளிதாக டிரம்ப் வசம் சிக்க வைக்க முடியாது.
அமெரிக்காவின் தலையீடு குறுகிய கால புவிசார் அரசியல் சலசலப்பை உருவாக்கியுள்ளது,
ஆனால் சீனா-பாகிஸ்தான் சார்பு நிலையின் அடித்தளத்தை அசைக்க வாய்ப்பில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.[ஒ]