இந்தியா

இந்தியா மீது 50% வரி உயர்த்திய டிரம்ப்: பேச்சுவார்த்தைக்கு 21 நாட்கள் அவகாசம்

Published

on

இந்தியா மீது 50% வரி உயர்த்திய டிரம்ப்: பேச்சுவார்த்தைக்கு 21 நாட்கள் அவகாசம்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஆகஸ்ட் 1-ம் தேதி அறிவிக்கப்பட்ட 25% வரிகளுக்கு மேல், இந்தியா மீது கூடுதலாக 25% வரி விதித்துள்ளார். இதனால், இந்தியா மீதான மொத்த வரி 50% ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும், இந்த கூடுதல் வரி அமலுக்கு வருவதற்கு 21 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இது வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த இந்தியாவிற்கு ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது.ஆங்கிலத்தில் படிக்க:இந்த புதிய வரி விதிப்பு, இந்தியாவின் ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியைக் கட்டுப்படுத்தும் ஒரு நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. இந்தியாவின் ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு, அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இந்த நடவடிக்கை இந்தியாவிற்கு பெரும் அழுத்தத்தை உருவாக்கியுள்ளது. இந்தியாவின் பல போட்டியாளர்களான வியட்நாம், பங்களாதேஷ் மற்றும் சீனா போன்ற நாடுகளுக்கு குறைந்த வரிகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, இந்திய ஏற்றுமதியாளர்கள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதில் எச்சரிக்கையுடன் உள்ளனர்.இருப்பினும், இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 80 பில்லியன் அமெரிக்க டாலரில், மருந்து மற்றும் மின்னணு சாதனங்கள் போன்ற பொருட்கள் விலக்கு பட்டியலில் இருப்பதால் பாதிப்பு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.அமெரிக்காவின் இந்த புதிய வரி விதிப்பு, உலகிலேயே எந்த ஒரு நாட்டிற்கும் இல்லாத அதிகபட்ச வரி விகிதமாகும். அதே நேரத்தில், இது பேச்சுவார்த்தைக்கான ஒரு புதிய வாய்ப்பையும் வழங்குகிறது. அமெரிக்காவின் விவசாய சந்தையில் இந்தியாவுக்கு நுழைவு கிடைப்பது தொடர்பான வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த, முக்கிய பொருளாதார அமைச்சகங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.NEW: President Donald J. Trump just signed an Executive Order imposing an additional 25% tariff on India in response to its continued purchase of Russian oil.Here is the text of the Order:By the authority vested in me as President by the Constitution and the laws of the…புதிய உத்தரவில், “ஆகஸ்ட் 17, 2025, நள்ளிரவு 12:01 மணி முதல் இந்த கூடுதல் 25% வரி அமலுக்கு வரும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் கப்பல்களில் ஏற்றி அனுப்பப்பட்ட பொருட்களுக்கு இது பொருந்தாது.இந்தியா தனது தேசிய நலன்களைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று கூறிவரும் நிலையில், இந்திய ஏற்றுமதியாளர்கள் அமெரிக்காவுடனான வர்த்தக உறவுகளைத் தொடர போராடி வருகின்றனர். இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 20% அமெரிக்காவிற்குச் செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.ரஷ்ய எண்ணெயை அதிகம் வாங்கும் நாடாக சீனா உள்ளது. ஆனால், இந்த புதிய உத்தரவில் சீனா குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. மாறாக, வேறு எந்த நாடும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ரஷ்ய கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறதா என்பதைக் கண்டறிய ஒரு குழு அமைக்கப்படும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்கா மற்றும் இந்தியாவின் உறவுகள் தற்போது அரசியல் ரீதியாக சர்ச்சைக்குள்ளாகி உள்ளன. டிரம்ப் நிர்வாகம், இந்தியாவின் ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு எதிர்ப்பு தெரிவித்து, வர்த்தகத் தடைகளை விதிக்கிறது. மேலும், பாகிஸ்தானுடன் அமெரிக்கா தனது உறவுகளை வலுப்படுத்த முயற்சித்து வருவது, இந்தியாவுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version