இலங்கை

இலங்கையை வந்தடைந்தார் ஆஸ்திரேலிய ஆளுநர்

Published

on

இலங்கையை வந்தடைந்தார் ஆஸ்திரேலிய ஆளுநர்

 ஆஸ்திரேலிய ஆளுநர் நாயகம் சமந்தா ஜாய் மோஸ்டின் ட்டு (Samantha Joy Mostyn) கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று (06) பிற்பகல் வந்தடைந்தார்.

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஆஸ்திரேலிய ஆளுநரும் (Samantha Joy Mostyn) அவரது குழுவினரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

Advertisement

ராயல் ஆஸ்திரேலிய விமானப்படைக்கு சொந்தமான ASY-319 என்ற சிறப்பு விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை மதியம் 01.54 மணிக்கு வந்தடைந்தனர்.

அவர்களை வரவேற்க , இலங்கை வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா ஊக்குவிப்பு அமைச்சர் விஜித ஹேரத், கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றிருந்தார்.

ஆஸ்திரேலிய ஆளுநர் (Samantha Joy Mostyn) மற்றும் அவரது குழுவினர் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நாட்டின் உயர்மட்ட இராஜதந்திரிகளை சந்தித்து கலந்துரையாட உள்ளனர்,

Advertisement

அதேசமயம் இலங்கையில் ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் உதவியுடன் நாட்டின் பண்டாரகம, மிரிஸ்ஸ மற்றும் வெலிகம பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்களைக் கண்காணிக்கும் சுற்றுப்பயணத்திலும் ஆஸ்திரேலிய ஆளுநர் (Samantha Joy Mostyn) உள்ளிட்ட குழுவினர் ஈடுபட உள்ளனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version