இலங்கை

இளம்பெண்ணை சீரழித்த உயர்நீதிமன்ற சட்டத்தரணி ; நள்ளிரவில் நடத்தப்பட்ட கொடூரம்

Published

on

இளம்பெண்ணை சீரழித்த உயர்நீதிமன்ற சட்டத்தரணி ; நள்ளிரவில் நடத்தப்பட்ட கொடூரம்

சென்னை பெசன்ட் நகரில் பெண் மென்பொறியாளரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை சேர்ந்த 22 வயதான இளம் பெண் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தனது ஆண் நண்பர்களுடன் பெசன்ட் நகர் கடற்கரைக்கு சென்றிருந்தார். அப்போது, இளம்பெண்ணிடம் மதுபோதையில் இருந்த நான்கு பேர் கொண்ட கும்பல் அத்துமீறியதாகக் கூறப்படுகிறது.

Advertisement

இதனைத் தட்டிக்கேட்ட பெண்ணிடம் தாங்கள் வழக்கறிஞராக இருப்பதாகக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், தகவலறிந்து அங்கு வந்த பொலிஸாருடனும் தகராறு செய்ததாகத் தெரிகிறது.

இதைத்தொடர்ந்து நான்கு பேர் கொண்ட கும்பலை சாஸ்திரி நகர் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று பொலிசார் விசாரித்தனர். இதில், பெண்ணிடம் அத்துமீறிய நபர் வேளச்சேரியை சேர்ந்தவர் என்பதும், அவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவருடன் இருந்த சக வழக்கறிஞர்கள் மூன்று பேரிடம் எழுதி வாங்கிக் கொண்டு பொலிஸார் எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version