சினிமா

‘காதி’ திரைப்பட டிரெய்லரை வெளியிட்ட படக்குழு …!மகிழ்ச்சியில் ரசிகர்கள்….!

Published

on

‘காதி’ திரைப்பட டிரெய்லரை வெளியிட்ட படக்குழு …!மகிழ்ச்சியில் ரசிகர்கள்….!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்த நடிகை அனுஷ்கா, கடந்த ஆண்டு வெளியான Miss பொலிஷெட்டி படத்தில் தனது பிரம்மாண்டமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். அதன் தொடர்ச்சியாக, தற்போது காதி (Ghaati) எனும் புதிய திரைப்படத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தை பிரபல இயக்குநர் கிரிஷ் ஜகர்லமுடி இயக்கியுள்ளார். மேலும், இந்த படத்தின் மூலம் தமிழ் நடிகர் விக்ரம் பிரபு தெலுங்கு சினிமாவில் முதன்முறையாக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ஜூலை 11ம் தேதி வெளியாவதாக இருந்த காதி திரைப்படத்தின் ரிலீஸ், தயாரிப்பு குழுவின் முடிவால் தள்ளிவைக்கப்பட்டது. தற்போது, இப்படத்தின் அதிகாரபூர்வ டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆக்‌ஷன், டிராமா மற்றும் உணர்வுகளால் நிரம்பிய கதைக்களம் கொண்ட இப்படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட ஐந்து மொழிகளில் உருவாகியுள்ளது.படக்குழுவின் புதிய அறிவிப்பின் படி, காதி திரைப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது. அனுஷ்கா மற்றும் விக்ரம் பிரபுவின் ஜோடி எப்படி மின்னும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version