டி.வி

‘சவுண்டு அக்கா’வுக்கு ஜாக்குலின் சொன்ன நக்கல் வாழ்த்து..! செம்மையா Vibe பண்ணும் Goa guys

Published

on

‘சவுண்டு அக்கா’வுக்கு ஜாக்குலின் சொன்ன நக்கல் வாழ்த்து..! செம்மையா Vibe பண்ணும் Goa guys

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோ தான் பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் பங்கு பற்றி தமது திறமைகளை வெளிக்  காட்டுவதற்காகவே பல கலைஞர்களும் நடிகர், நடிகைகளும் போட்டி போட்டு பங்கேற்று வருகின்றனர்.பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதியாக இடம்பெற்ற எட்டாவது சீசனில் முத்துக்குமரன் வெற்றி பெற்றார்.  இதில் முதன்முறையாக விஜய் சேதுபதி கோஸ்டாக பங்கேற்று இருந்தார்.பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனில் பங்கேற்ற போட்டியாளர்களில் மிக முக்கியமான போட்டியாளராக சௌந்தர்யா காணப்பட்டார். பலரும் சௌந்தர்யா தான் பிக்பாஸ் சீசன் எட்டிற்கான டைட்டிலை வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கையிலும் காணப்பட்டனர். ஆனாலும் அதிகமானோர் அவரது நடவடிக்கைகள் மீது வெறுப்பையும் கொட்டித் தீர்த்தனர். இறுதியில் இரண்டாவது ரன்னரப்பாக சௌந்தர்யா மக்களால் தெரிவு செய்யப்பட்டார்.பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய சௌந்தர்யா, ஒருசில ரியாலிட்டி   ஷோக்களிலும் நிகழ்ச்சிகளிலும், பொது மேடைகளிலும் பங்கேற்று வருகின்றார்.இந்த நிலையில் பிக்பாஸ் பிரபலமும் நடிகையுமான சௌந்தர்யா தனது முப்பதாவது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இதனை முன்னிட்டு சீரியல் நடிகையும் பிக்பாஸ் பிரபலமான ஜாக்குலின் தனது இன்ஸ்டா பக்கத்தில் அவருக்கு நக்கலாக பிறந்த நாள் வாழ்த்தொன்றை பதிவிட்டுள்ளார். அதில் ‘ஹாப்பி 30வது பர்த்டே சவுண்டு அக்கா’ என அவருடைய வயதை கேலி செய்யும் வகையில் கேப்ஷன் போட்டு உள்ளார்  ஜாக்குலின். அதற்கு சௌந்தர்யா உங்களுக்கு 30 வயது வராதா என்பது போல பதிவிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் வைரலாகி வருவதோடு சௌந்தர்யாவுக்கு பலரும் தமது வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். மேலும் சௌந்தர்யாவின்  பிறந்த நாளை முன்னிட்டு Goa கேங் ஒன்று கூடியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version