இலங்கை

சாவகச்சேரி சமூர்த்தி வங்கிக்காணி இவ்வாண்டுக்குள் அடிக்கல் நடுக; வடக்கு ஆளுநர் அறிவுறுத்து!

Published

on

சாவகச்சேரி சமூர்த்தி வங்கிக்காணி இவ்வாண்டுக்குள் அடிக்கல் நடுக; வடக்கு ஆளுநர் அறிவுறுத்து!

சாவகச்சேரி சமூர்த்தி வங்கிக்குப் பொருத்தமான காணியை சாவகச்சேரிப்பிரதேச செயலாளர், சாவகச்சேரி நகரசபையினர். சமூர்த்தித் திணைக்களத்தினர் ஆகிய மூன்று தரப்பின ரும் இணைந்து அடையாளப்படுத்தி அதனைப் பெற்றுக்கொள்வதற்குரிய நடவடிக்கைகளை இரண்டு மாதங்களுக்குள் நிறைவுசெய்யுமாறும் இந்த ஆண்டு இறுதிக்குள் வங்கிக் கட்டடத்துக்குரிய அடிக்கல் நடுகை செய்யப்படவேண்டும் எனவும் ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.

சாவகச்சேரி சமூர்த்தி வங்கிக்குரிய காணி தொடர்பான விடயத்துக்கு நீண்டகாலம் இழுபறி நிலவிவந்த நிலையில் அது தொடர்பில் வடக்குமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கடந்த வியாழக்கிழமை நேரடியாகச் சென்று தொடர்புடைய தரப்புகளுடன் கலந்துரையாடல் நடத்தினார்.

Advertisement

சாவகச்சேரி நகரசபையின் சிறுவர் பூங்காவின் ஒரு பகுதிக்காணியை குறித்த வங்கிக்கு வழங்குவதாகக் கூறப்பட்டிருந்த நிலையில் அந்தக் காணியை ஆளுநர் முதலில் நேரில் சென்று பார்வையிட்டார். அந்தக் காணி சிறுவர் பூங்காவின் தொடர் அபிவிருத்திக்குத் தேவை எனவும், சாவகச்சேரி நகரத்துக்கு அண்மையாக தனங்கிளப்பு வீதி மகிழங்கேணியில் மாற்றுக்காணி வழங்கத் தயார் எனவும் நகரசபை தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

சாவகச்சேரி நகரசபையால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள மாற்றுக்காணி தமக்குப் பொருத்தமில்லை எனவும், தமது வங்கிக்கு ஆரம்பத்தில் ஒதுக்கப்பட்ட சாவகச்சேரி நகரசபையுடன் இணைந்த அரச காணியை மீளவும் ஒப்படைக்கு மாறும் சமூர்த்திச்சங்கப் பிரதிநிதிகளால் கூறப்பட்டது. இதனையடுத்து, பொருத்தமான மாற்றுக்காணியை சமூர்த்திச்சங்கத்தினர் அடையாளப்படுத்தி வழங்கினால் அதனைக் கொள்வனவுசெய்து வழங்கத் தயாரென சாவகச்சேரி நகரசபைப் பிரதிநிதிகள் தெரிவித்தனர். இருதரப்பும் காணி தொடர்பான இணக்கத்துக்கு வராதநிலையில், 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்தப் பிரச்சினை நீடித்துச்செல்லுவதைக் கருத்திலெடுத்த ஆளுநர், மக்கள் நலன்சார்ந்தே இரு தரப்பும் செயற்படுகிறதென்பதை நினைவிலிருத்தி பொது இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும் என்றார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version