சினிமா

சூர்யாவ பார்த்து கத்துக்கணும்.. ! முக்கிய நடிகர்களுக்கு அட்வைஸ் பண்ணிய பிரபலம்

Published

on

சூர்யாவ பார்த்து கத்துக்கணும்.. ! முக்கிய நடிகர்களுக்கு அட்வைஸ் பண்ணிய பிரபலம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் சூர்யா. இவருடைய நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. இன்னொரு பக்கம் சமீபத்தில் நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையின் மூலம் கல்வி கற்று வெற்றி பெற்ற பயனாளிகளையும் அவர்களுடைய அனுபவங்களையும் வெளிஉலகுக்கு வெளிக்காட்டும் விதத்தில் விழாவொன்றும் முன்னெடுக்கப்பட்டது.அகரம் விதையின்15ம் ஆண்டு வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. அதில் சூர்யாவுடைய குடும்பம் மட்டுமின்றி திரைத்துரையை சார்ந்த இயக்குனர்கள், நடிகர்கள், கலைஞர்கள் என பலரும் பங்கேற்றனர்.இதன் போது, கல்வியே ஆயுதம் என்பதுதான் அகரத்தின் நம்பிக்கையாகும். அந்த நம்பிக்கை இன்று நிஜமாகி உள்ளது என்று நடிகர் சூர்யா பெருமிதமாக விழாவை தொடங்கி வைத்திருந்தார். அது மட்டுமின்றி அகரத்தின் மூலம் சுமார் 51 பேர் மருத்துவர்கள் ஆகியுள்ளதாகவும், 6700 பேர் பட்டதாரிகளாக உருவாகியுள்ளதாகவும் தெரிவித்து இருந்தார்.குறித்த விழாவில் அகரம் மூலம் பயனடைந்தவர்கள் தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்தனர். இதை கேட்ட பலரும் உணர்ச்சிபூர்வமாகவே சூர்யா உட்பட அகரம் மூலம் பயனடைந்தவர்களுக்கு தமது வாழ்த்துக்களையும் நன்கொடைகளையும் வழங்கி வைத்தனர். இந்த நிலையில் நடிகர் சூர்யாவின் அகரம் தொடர்பில்  வெளிவரும் நெகட்டிவ் கமெண்ட்ஸ்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் ஹரி கிருஷ்ணன். இதன்போது அவர் தெரிவிக்கையில், பொதுவாகவே நல்ல செயல்களை செய்யும் மனிதர்களை பார்ப்பது அரிதாகவே காணப்படுகின்றது. ஆனாலும் கல்வி என்ற ஆயுதத்தை கையில் ஏந்திய சூர்யா தொடர்பில் நெகட்டிவ்  கருத்துக்கள் வெளி வருவது வேதனையை தருகின்றது.திரைத் துறையினர் மட்டும்தான் ஒட்டுமொத்த மக்களையும் சார்ந்து காணப்படுகின்றனர். ஏனென்றால் அவர்களுக்கு மக்கள் மூலம் தான் வருமானம் கிடைக்கின்றது. அதில் வரும் வருமானத்தை வைத்து மக்களுக்கு நல்லது செய்வது என்பது மிகவும் பாராட்டக் கூடிய விஷயம்.ஆனாலும் சமூக வலைத்தள பக்கங்களில் இது தொடர்பில் மாறுபட்ட கருத்துக்களை விதைக்கின்றனர். அதிலும் அகரத்தில் உங்களுடைய குழந்தைகளை படிக்க வைக்க முடியாதா? என்று  சூர்யா ஜோதிகாவிடம் கேள்வி எழுப்புகின்றனர்.அகரம் மூலம் பயனடைந்த மாணவர்கள் அத்தனை பேரும் பிரபல கல்லூரிகளிலே கல்வி கற்றனர். பல கல்லூரிகளில் சீட் வாங்க முடியாத கல்லூரிகளிலேயே பலரும் படித்தனர். சூர்யாவின் குழந்தைகளுக்கும் அகரம் மூலம் பயனடைந்த குழந்தைகளுக்கும் எந்த ஒரு வேறுபாடும் இல்லை. ஆனால் சூர்யாவின் நல்ல செயல்கள் தொடர்பில் தேவையற்ற கருத்துக்களை வேண்டும் என்று சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிடுகின்றார்கள்.  சூர்யாவை பார்த்துதான் எல்லா நடிகர்களும் கற்றுக்கொள்ள வேண்டும் என ஹரி கிருஷ்ணன் தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version