இலங்கை

செம்மணியில் மீட்கப்பட்ட சிசுவின் எலும்பு கூட்டு தொகுதி ; நிறுத்தப்பட்ட அகழ்வு பணிகள்

Published

on

செம்மணியில் மீட்கப்பட்ட சிசுவின் எலும்பு கூட்டு தொகுதி ; நிறுத்தப்பட்ட அகழ்வு பணிகள்

செம்மணி மனித புதைகுழியில் இருந்து சிசு ஒன்றின் எலும்பு கூட்டு தொகுதி இன்று (6) யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ. ஆனந்தராசா முன்னிலையில் அகழ்ந்து எடுக்கப்பட்டது.

செம்மணியில் இதுவரை கட்டம் கட்டமாக 41 நாட்கள் முன்னெடுக்கப்பட்டுள்ள அகழ்வுப்பணிகளில் சிறுவர்கள், சிசுக்கள் உள்ளிட்ட 133 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், இதுவரையில் 147 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

Advertisement

அதேவேளை, கடந்த 16 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட இரண்டாம் கட்டத்தின் இரண்டாம் பகுதி அகழ்வு பணிகள் இன்றுடன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, எதிர்வரும் 21ஆம் திகதியளவில் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version