இலங்கை

தேசப்பந்து தென்னகோனை பதவி நீக்குவதற்கான பிரேரணை ஜனாதிபதிக்கு அனுப்பிவைப்பு!

Published

on

தேசப்பந்து தென்னகோனை பதவி நீக்குவதற்கான பிரேரணை ஜனாதிபதிக்கு அனுப்பிவைப்பு!

தேசபந்து தென்னகோனை ஐஜிபி பதவியில் இருந்து நீக்குவதற்காக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்ரமரத்னவால் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

 தேசபந்து தென்னகோனை ஐஜிபி பதவியில் இருந்து நீக்குவதற்காக நேற்று (05) நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், பிரேரணைக்கு ஆதரவாக 177 வாக்குகள் அளிக்கப்பட்டன. பிரேரணைக்கு எதிராக எந்த வாக்குகளும் அளிக்கப்படவில்லை. 

Advertisement

 ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் வாக்களிப்பில் இருந்து விலகி இருந்தார்.

அதன்படி, 2002 ஆம் ஆண்டு 5 ஆம் இலக்க அதிகாரிகளை நீக்குவதற்கான நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 17 இன் படி, ஐஜிபி தேசபந்து தென்னகோனை ஐஜிபி பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை 177 பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version