இலங்கை
நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவ எட்டாம் திருவிழா
நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவ எட்டாம் திருவிழா
வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் எட்டாம் திருவிழா நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (5) இடம்பெற்றது.
எட்டாம் திருவிழாவின் மாலை திருவிழாவின் போது, முருக பெருமான், வள்ளி தெய்வானை ஆகியோர் மகர வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தனர்.
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த மகோற்சப பெருவிழா மிகவும் கோலாகலமாக இடம்பெற்று வரும் நிலையில் புலம்பெயர் தேசத்தில் இருந்தும் பக்தர்கள் பெருமளவில் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.