இலங்கை
நாளைய வெப்பநிலை குறித்து வெளியான எச்சரிக்கை
நாளைய வெப்பநிலை குறித்து வெளியான எச்சரிக்கை
மனித உடலால் உணரப்படும் வெப்பநிலையானது நாளைய தினம், எச்சரிக்கை மட்டத்தில் நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அதன்படி, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் நிலவக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நிலவும் வெப்பமான காலநிலையினால் பணியிடங்களில் உள்ளவர்கள் அதிகளவான நீரை பருக வேண்டும் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, வீட்டில் தங்கியிருக்கும் முதியவர்கள் மற்றும் நோயாளிகள் தொடர்பில அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் சுகாதார அதிகாரிகள் கோரியுள்ளனர்.