சினிமா
நெப்போலியன் மகனுக்கு மீண்டும் திருமணம்..! ஒன்றுதிரண்ட அமெரிக்கர்கள்
நெப்போலியன் மகனுக்கு மீண்டும் திருமணம்..! ஒன்றுதிரண்ட அமெரிக்கர்கள்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், வில்லனாகவும் வலம் வந்தவர் தான் நடிகர் நெப்போலியன். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். எனினும் இவருடைய மூத்த மகன் தசைக்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட காரணத்தினால் தனது சினிமா, அரசியல் என்பவற்றை விட்டுவிட்டு இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் செட்டில் ஆனார்.தனது தந்தைக்கான அனைத்து கடமைகளையும் நிறைவேற்றிய நெப்போலியன், இறுதியில் தனுஷுக்கு பல விமர்சனங்களுக்கு மத்தியில் பிரம்மாண்டமாக திருமணத்தையும் நடத்தி வைத்தார்.தனுஷ் – அக்சயாவின் திருமணம் முதலில் ஜப்பானில் நடைபெற்றது. இதன்போது நெப்போலியன் குடும்பம் கப்பலில் பயணம் செய்திருந்தனர். இது தொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் சமூக வலைதள பக்கத்தில் வைரலாகின.அதேபோல அக்சயா தனுசை பணத்திற்கு ஆசைப்பட்டு தான் அவரை திருமணம் செய்கின்றார் என்ற பல சர்ச்சை கருத்துக்களும் எழுந்தன. மேலும் தனுஷால் தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபட முடியாது என்ற குற்றச்சாட்டும் வெகுவாக முன்வைக்கப்பட்டது.இந்த நிலையில் தற்போது பலரது விமர்சனங்களையும் தாண்டிய தனுஷ் – அக்சயா தம்பதியினர் தமது திருமண வாழ்க்கையை வெற்றிகரமாக முன்னெடுத்து வருவதோடு அவர்கள் மீண்டும் அமெரிக்க முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளார்கள். தற்போது இது தொடர்பான வீடியோ சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகின்றன. இதனை பார்த்த பலரும் பல விமர்சனங்களை தாண்டி தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.