இலங்கை

மேலும் 6 என்புத்தொகுதிகள் செம்மணியில் நேற்றும் அடையாளம்

Published

on

மேலும் 6 என்புத்தொகுதிகள் செம்மணியில் நேற்றும் அடையாளம்

அரியாலை செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்று இடம்பெற்ற அகழ்வுப் பணிகளின் போது, மேலும் ஆறு என்புத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பான இரண்டாம் கட்ட அகழ்வின் 31ஆம் நாள் நடவடிக்கைகள் நேற்று முன்னெடுக்கப்பட்டன. இதன்போதே மேலும் ஆறு என்புத்தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

Advertisement

இதன்படி இதுவரை அடையாளம் காணப்பட்ட என்புத்தொகுதிகளின் எண்ணிக்கை 141ஆக அதிகரித்துள்ளது. நேற்று மேலும் 4 என்புத்தொகுதிகள் மீட்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை மீட்கப்பட்ட என்புத்தொகுதிகளின் எண்ணிக்கை 130ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version