இலங்கை

யாழில் பெருமளவான கஞ்சாவுடன் இருவர் கைது!

Published

on

யாழில் பெருமளவான கஞ்சாவுடன் இருவர் கைது!

யாழ்ப்பாணம் – சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயிலணி மற்றும் மல்லாகம் பகுதியைச் சேர்ந்த இருவர் நேற்றிரவு, இணுவில் தியேட்டரடியில் வைத்து கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது அவர்களிடமிருந்து 9 கிலோ 794 கிராம் எடையுடைய கஞ்சாப் பொதிகள் மீட்கப்பட்டன.

Advertisement

மீட்கப்பட்ட கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவரும் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் கையளிக்கப்பட்டனர். விசாரணைகளின் பின்னர் அவர்கள் இருவரையும் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version