இந்தியா

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கியதற்கு இந்தியாவுக்கு மேலும் 25% வரி விதித்த டிரம்ப் – வெள்ளை மாளிகை அறிவிப்பு

Published

on

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கியதற்கு இந்தியாவுக்கு மேலும் 25% வரி விதித்த டிரம்ப் – வெள்ளை மாளிகை அறிவிப்பு

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்தியா மீது கூடுதலாக மேலும் 25% வரி விதித்துள்ளதாக வெள்ளை மாளிகை புதன்கிழமை தெரிவித்துள்ளது.ஆங்கிலத்தில் படிக்க:இந்தியாவுக்கு மேலும் 25% வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ஏற்கெனவே 25% வரி விதிக்கப்பட்டநிலையில் தற்போது மேலும், 25% வரியை அமெரிக்கா விதித்துள்ளது. ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த டிரம்ப் கெடு விதித்திருந்தார்.இந்த வார தொடக்கத்தில், டிரம்ப், “இந்தியா ரஷ்ய எண்ணெயை பெருமளவில் வாங்கி, அதை அதிக லாபத்திற்கு விற்பனை செய்வதாக” குற்றம் சாட்டி, இந்தியா மீதான அமெரிக்க வரிகளை “கணிசமாக” உயர்த்துவதாக மிரட்டியிருந்தார்.இதற்கு பதிலளித்த இந்தியா, ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதல் தொடர்பாக இந்தியா மீது அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் “நியாயமற்ற மற்றும் பகுத்தறிவற்ற” குறி வைப்பதற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்திருந்தது. அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தக உறவுகளைப் பராமரித்து வருவதால், இந்த விவகாரத்தில் அவற்றின் “இரட்டை நிலைப்பாடு” குறித்தும் இந்தியா சுட்டிக்காட்டியது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version