இலங்கை

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது!

Published

on

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது!

எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் தமிழகத்தின் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 14 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

பாம்பன் தெற்கு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மாறன் என்ற மோட்டார் படகில் மீன்பிடிக்கச் சென்ற பத்து மீனவர்கள் கல்பிட்டி கடல் பகுதிக்கு அருகே கைது செய்யப்பட்டு புத்தளம் கடற்படைத் தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

Advertisement

மீனவர்களிடம் முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு, அவர்கள் புத்தளம் மீன்வளத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இதேபோல், திருப்பாலைக்குடியைச் சேர்ந்த மீன்பிடிக்கச் சென்ற நான்கு மீனவர்களும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கையில் உள்ள காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். 

அவர்கள் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version