இலங்கை

வட்ஸ்அப் செயலியில் பில்லியன் டொலரில் மோசடி!

Published

on

வட்ஸ்அப் செயலியில் பில்லியன் டொலரில் மோசடி!

உலகெங்கிலும் உள்ள மக்களைக் குறிவைத்து மோசடி செய்பவர்களுடன் தொடர்புடைய 6.8 மில்லியன் கணக்குகளை வட்ஸ்அப் முடக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. 

தென்கிழக்கு ஆசியாவில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளால் நடத்தப்படும் மோசடி மையங்களுடன் பலர் பிணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டு இதில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

ஒரு பயனரை அவர்களின் தொடர்பு பட்டியலில் இல்லாத ஒருவர் Group Chat இல் இணைக்கும் போது, சாத்தியமான மோசடி நடவடிக்கைகள் குறித்து பயனர்களை எச்சரிக்கும் வகையில் புதிய மோசடி எதிர்ப்பு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியதால்  வட்ஸ்அப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

இந்த நடவடிக்கை, குற்றவாளிகள் வட்ஸ்அப் கணக்குகளை அபகரிப்பது அல்லது போலி முதலீட்டுத் திட்டங்கள் மற்றும் பிற மோசடிகளை ஊக்குவிக்கும்  குரூப் சட்டில் பயனர்களைச் சேர்ப்பது போன்ற அதிகரித்து வரும் பொதுவான தந்திரத்தைக் குறிவைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பொதுவாக, மோசடி செய்பவர்கள் முதலில் ஒரு குறுஞ்செய்தி மூலம் சாத்தியமான இலக்குகளைத் தொடர்புகொண்டு உரையாடலை சமூக ஊடகங்கள் அல்லது தனியார் செய்தியிடல் பயன்பாடுகளுக்கு நகர்த்துவார்கள் என்றும் வட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

Advertisement

மேலும் இந்த மோசடிகள் பொதுவாகப் பணம் செலுத்துதல் அல்லது கிரிப்டோகரன்சி தளங்களில் முடிக்கப்பட்டதாக வட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

தென்கிழக்கு ஆசிய நாடுகளான மியன்மார், கம்போடியா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளிலிருந்து மக்களை ஏமாற்றும் மோசடி மையங்கள் பல பில்லியன் டொலர்களை ஏமாற்றுவதாக அறியப்படுகிறது. 

மோசடிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும், தங்கள் கணக்குகள் திருடப்படாமல் பாதுகாக்க வட்ஸ்அப் இன்  two step verification போன்ற மோசடி எதிர்ப்பு நடவடிக்கைகளைப் பயன்படுத்துமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.[ஒ]

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version