இலங்கை

வரியைக் குறைப்பதற்கான அமெ. நிபந்தனைகளை பகிரங்கப்படுத்துங்கள்; விமல் வீரவன்ஸ கோரிக்கை!!!

Published

on

வரியைக் குறைப்பதற்கான அமெ. நிபந்தனைகளை பகிரங்கப்படுத்துங்கள்; விமல் வீரவன்ஸ கோரிக்கை!!!

தீர்வை வரியைக் குறைப்பதற்காக அமெரிக்காவின் எவ்வாறான நிபந்தனைகள் ஏற்கப்பட்டன என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ வலியுறுத்தினார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
இலங்கைக்கு ஆரம்பத்தில் 44 சதவீத வரி விதிக்கப்பட்டது. பின்னர் அது 30 வீதமாகக் குறைக்கப்பட்டது. இறுதியில் 20 சதவீதமாக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தங்களுக்கு வரவேண்டும் என அமெரிக்க தரப்பில் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. எனவே, இலங்கை ஏற்றுக்கொண்டுள்ள நிபந்தனைகள் எவை? சோபா ஒப்பந்தத்தக்குரிய இணக்கம் ஏற்பட்டுள்ளதா? சோபா ஒப்பந்தம் ஏற்கப்பட்டால் அமெரிக்கப் படைகள் நாட்டுக்குள் வரமுடியும். ஆகவே, பாதுகாப்பு நிபந்தனைகள் ஏற்கப்பட்டனவா? இதுபற்றி எமக்குத் தெரியாது. ஏற்கப்பட்டிருந்தால் அவை எவை என்பதை வெளிப்படுத்த வேண்டும். இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்ட ஏழு ஒப்பந்தங்கள் கூட இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை. அமெரிக்காவுடன் ஏற்கப்பட்ட நிபந்தனைகளை இந்த அரசாங்கம் வெளிப்படுத்தும் என்பதை நம்பமுடியாது- என்றார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version