சினிமா
விஜயகுமார் காலில் விழுந்து அழுத வனிதா.. வெடித்த பிரச்சனை! இது எப்போது நடந்தது தெரியுமா
விஜயகுமார் காலில் விழுந்து அழுத வனிதா.. வெடித்த பிரச்சனை! இது எப்போது நடந்தது தெரியுமா
நடிகை வனிதா விஜயகுமார் சினிமாவில் அறிமுகமாகி படங்களில் நடித்து வந்த காலகட்டங்களிலேயே திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டார். ஆனால், தனது முதல் திருமணத்தில் நிம்மதி கிடைக்காததால், அந்த வாழ்க்கையில் இருந்து வெளியேறினார்.விவாகரத்து பெற்று பிரிந்தார். இதனால் அவருக்கும் அவருடைய தந்தை விஜய்குமாருக்கும் இடையே பிரச்சனை வெடித்தது. அதன்பின் இரண்டு திருமணங்கள் செய்தும் அவர் நினைத்தது போல் மண வாழ்க்கை அமையவில்லை என்பதால், அதிலிருந்து வெளியேறினார்.சமீபத்தில் Mrs & Mr என்கிற படத்தை எடுத்தார். ஆனால், இப்படம் படுதோல்வியடைந்தது. இதுவும் மிகப்பெரிய ஏமாற்றத்தை அவருக்கு தந்துள்ளது. இந்த நிலையில், தனது தந்தையுடனான பிரச்சனை குறித்து நடிகை வனிதா கொடுத்த பேட்டி ஒன்றி திடீர்ரென தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது.அவர் அளித்த பேட்டியில், “எனக்கும் என் அம்மாவுக்கும் பிரச்சனை வந்தபோது அம்மா உயிரோடு இருந்தார். அவர்தான் என்னிடம், ‘நீ வீட்டுக்கு வந்தது அப்பாவிடம் பேசு’ என கூறினார். நானும் சென்றேன். வீட்டில் அவர் படியில் இறங்கிவருகிறார். நான் மேலே ஏற்றிக்கொண்டிருந்தேன். இதில் யார் சரி யார் தவறு என்பதற்கெல்லாம் நான் செல்லவில்லை.நீண்ட இடைவேளைக்கு பிறகு அப்போதுதான் அவரை நான் பார்த்தேன். உடனே நான் அவரை கட்டிப்பிடித்து அழுது, காலில் விழுந்து மன்னிப்பு கேட்டேன். அவரும் அழுதார். எல்லாமே சுமுகமாக வந்தது. ஆனால், மீண்டும் பிரச்சனை வெடித்துவிட்டது” என கூறியுள்ளார்.