சினிமா

Oh God Beautiful முதல் பாடலை பாடிய பிரபல யார் தெரியுமா?புரோமோ வெளியிட்ட படக்குழு…!

Published

on

Oh God Beautiful முதல் பாடலை பாடிய பிரபல யார் தெரியுமா?புரோமோ வெளியிட்ட படக்குழு…!

யூடியூப் வாயிலாக மக்கள் மனதில் தனி இடம் பிடித்த பரிதாபங்கள் கோபி மற்றும் சுதாகர், தமிழ் சினிமாவில் புதிய படைப்பிற்கு களம் இறங்கியுள்ளனர். சமூகக் கருத்துகளை நகைச்சுவையுடன் துளிக்கவைக்கும் இவர்களின் வீடியோக்கள், இளைய தலைமுறையின் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது அனைவருக்கும் தெரிந்ததே.இந்நிலையில், இந்த பிரபல ஜோடி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் “Oh God Beautiful”. சமீபத்தில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் தொடர்ச்சியாக, இன்று படம் சார்ந்த முதல் பாடல் “வேணு மச்சான் Peace” என்பதன் புரோமோவை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது படக்குழு. மேலும்  இந்தபாடலை சிவகார்த்திகேயன் பாடியுள்ளார். பாடலின் தலைப்பே போல, வீணை சத்தத்துடன் ஆரம்பமாகும் இந்த பாடல், ஒரு பக்கத்து இளைஞனின் அட்டகாசமான பயணத்தையும், சமாதானம் மீதான அவனது பார்வையையும் நகைச்சுவையுடன் சொல்லுகிறது. பரிதாபங்கள் கோபியின் இயல்பான நடிப்பு மற்றும் சுதாகரின் தனித்துவமான ஸ்டைல் இதில் ஒட்டுமொத்தமாக இடம்பெற்று இருக்கின்றது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version