இலங்கை

UK, France செல்லும் ஆசையில் வடக்கு இளைஞர் யுவதிகள்; புலம்பெயர் தமிழரின் உருட்டு அம்பலம்!

Published

on

UK, France செல்லும் ஆசையில் வடக்கு இளைஞர் யுவதிகள்; புலம்பெயர் தமிழரின் உருட்டு அம்பலம்!

 வெளிநாட்டு  மோகத்தில் வடபகுதி இளைஞர்கள் , யுவதிகள், குறிப்பாக யாழ்ப்பாணத்து பிள்ளைகள் ஏமாற்றப்படும் சம்பவங்கள் தொடர்பில் சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

UK, France போன்ற நாடுகளுக்கு தாம் இலவசமாக அனுப்புவதாகவும், அங்கு சென்ற பின்னர் பணம் கொடுத்தால் போதும் என்றும் ஜேர்மன் வாழ் புலம்பெயர் தமிழர் ஒருவரின் ஆசை வார்த்தையில் மயங்கி பலர் ஏமாந்து போயுள்ளதாக கூறப்படுகின்றது.

Advertisement

இலங்கையில் பல முகவர்களை வைத்து அவர்களின் வங்கி இலக்கங்களுக்கு குறித்த ஜேர்மன் வாழ் புலம்பெயர் தமிழர்  பணம் வைப்பிலிட கூறிய குறுஞ்செய்திகளும் அம்பலமாகியுள்ளது.

வெளிநாடுகளுக்கு  அனுப்புவதாக  சமூக ஊடகங்களில், அவர்களால் பரப்படும் விளம்பரங்களை நம்பி தமிழ் இளைஞர், யுவதிகள் தங்களது வாழ்க்கையை தொலைத்துக் கொண்டிருக்கின்றனர்.

குறித்த மோசடியாளர்கள் , வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறி கொழும்பில் இயங்கும் ஓர் அலுவலகம் ஊடாக இந்தியா செல்லும்  விசாக்களை பெற்று அங்கு அனுப்பி வைப்பதுடன், பணத்தையும் மோசடியாக பெற்று வந்துள்ளமை அம்பலமாகியுள்ளது.

Advertisement

அதேசமயம்  UK, France  நாடுகளுக்கு  செல்லாது இடைநடுவில் அதாவது  இலங்கையில் இருந்து  இலகுவாக விசா பெற்று செல்லக்கூடிய நாடுகளுக்கு அவர்களை அனுப்பி வைப்பதுடன் அவர்களிடம் பணத்தையும் இலங்கையில் உள்ள வங்கிகளுக்கு அனுப்புமாறு கூறப்பட்ட  குறுஞ்செய்திகளும் பாதிக்கப்பட்டவர்களால் சமூக வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

அதேவேளை இவ்வாறான மோசடியாளர்கள் தொடர்பில் இலங்கை பொலிஸாரும் பொதுமக்களுக்கு எச்சரிக்கைகளை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.    

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version