சினிமா
அஞ்சு வண்ண பூவே!! சரிகமப அரங்கையே உருக வைத்த பவித்ரா…கட்டியணைத்த சைந்தவி…
அஞ்சு வண்ண பூவே!! சரிகமப அரங்கையே உருக வைத்த பவித்ரா…கட்டியணைத்த சைந்தவி…
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று சரிகமப. தற்போது சரிகமப சீனியர் சீசன் 5 நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது.இந்த வாரம் டெடிகேஷன் ரவுண்ட் நடந்துள்ளது. அப்போது தன் கணவரை இழந்து, சிங்கிளாக தன் மகளை வளர்த்து வரும் போட்டியாளர் பவித்ரா, தக் லைஃப் படத்தின் அஞ்சு வண்ண பூவே பாடலை பாடியுள்ளார். அரங்கில் இருந்த அனைவரும் கண்ணீருடன் பவித்ரா பாடியதை பார்த்து உருகியுள்ளனர்.பவித்ரா பாடியதும் சைந்தவி மேடைக்கு வந்து பவித்ராவை கட்டியணைத்து பாராட்டியிருக்கிறார். மேலும், பாடலை முடித்ததும், மறைந்த பவித்ராவின் கணவர் AI மூலம் பேசிய வீடியோவை சரிகமப குழு ஒளிப்பரப்பி இருக்கிறது.தற்போது பவித்ராவின் வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு அனைவரையும் உணர்ச்சிபூர்வமாக உருக வைத்து வருகிறது.