இலங்கை

அடியவர்களுக்கு அருள்பாலிக்க மஞ்சத்தில் அசைந்து வந்த நல்லூர் கந்தன் ; காண குவிந்த பக்தர்கள்

Published

on

அடியவர்களுக்கு அருள்பாலிக்க மஞ்சத்தில் அசைந்து வந்த நல்லூர் கந்தன் ; காண குவிந்த பக்தர்கள்

வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் மகோற்சப பெரும் திருவிழா நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

நல்லூர் கந்தசுவாமி கோயிலில் கொண்டாடப்படும் ஒரு முக்கிய திருவிழாகளில் மஞ்சத் திருவிழாவும் ஒன்றாகும்.

Advertisement

மஞ்சத் திருவிழா நல்லூர் கந்த மகோற்சவத்தின் 10ஆம் திருவிழாவாகும். இன்றைய தினம்(7)  நல்லூர் கந்தனின்  மஞ்சதிருவிழா ஆஅகும்.

இந்நிலையில்  சிற்ப சாஸ்திர ஆகம விதிமுறைப்படி கலையம்சமும் சிற்பங்களும் ஒருங்கே அமையப் பெற்ற அழகிய மஞ்சத்தில் முத்துக் குமாரசுவாமியாக முருகப் பெருமான் எழுந்தருளி அருள் பாலித்தார்.

முத்துக்குமாரசாமி மற்றும் வள்ளி, தெய்வானை ஆகியோர் மஞ்சத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்கள்.

Advertisement

அடியவர்களுக்கு அருள்பாலிக்க மஞ்சத்தில் அசைந்து வந்த நல்லூர் கந்தன் அழகை காண கோடி கண்கள் வேண்டும்.

நல்லூர் கந்தன் மஞ்சதிருவிழாவில் பெரும் நூற்றுக்கணக்கான அடியவர்கள் கலந்துகொண்டு நல்லூர் கந்தனின் அருளைப் பெற்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version