இலங்கை

அடுத்த பொலிஸ்மா அதிபர் யார்?

Published

on

அடுத்த பொலிஸ்மா அதிபர் யார்?

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபரைத் தெரிவு செய்வதற்காக அரசியலமைப்பு பேரவை இன்று கூடவுள்ளது. 

 இதன்படி, அரசியலமைப்பு பேரவை இன்று பிற்பகல் 1.30 இற்கு நாடாளுமன்ற வளாகத்தில் கூடவுள்ளது.

Advertisement

இதேவே​ளை, தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட கடிதம் நேற்று (6) அவரிடம் கையளிக்கப்பட்டது. 

 பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் அவரது வீட்டிற்குச் சென்று தொடர்புடைய கடிதத்தை வழங்கியதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

 தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை சமீபத்தில் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. 

Advertisement

 அதன்படி, இது தொடர்பான கடிதம் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டு, நேற்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் கையொப்பமிடப்பட்டது.

அதன்படி, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினால் குறித்த கடிதம் தேசபந்து தென்னகோனிடம் ஒப்படைக்கப்பட்டது.

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version