இலங்கை
அரச கட்டமைப்பை மீட்க அடுத்த பட்ஜெட்டில் நிதி; ஜனாதிபதி அநுர தெரிவிப்பு!
அரச கட்டமைப்பை மீட்க அடுத்த பட்ஜெட்டில் நிதி; ஜனாதிபதி அநுர தெரிவிப்பு!
பெளதீக மற்றும் ஆன்மீக ரீதியாக சிதைந்த அரச கட்டமைப்பை மீட்டெடுக்கவும், நவீன அரச சேவையை உருவாக்கவும் அடுத்த ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நேற்றுமுன்தினம் நடைபெற்ற இலங்கை நிர்வாக சேவைச் சங்கத்தின் வருடாந்த மாநாட்டில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
அரசாங்க ஊழியர்களின் சம்பள உயர்வுக்காக 2026 மற்றும் 2027ஆம் ஆண்டுகளில் தலா 11 ஆயிரம் கோடி ரூபா ஒதுக்கப்படும். சமூக விழுமியங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் அதிகாரிகளை உருவாக்க வேண்டும். அரச சேவையை கவர்ச்சிகரமாகவும், மக்கள் மயமாகவும் மாற்ற அரசு உறுதிபூண்டுள்ளது. அதற்கு அதிகாரிகளின் அர்ப்பணிப்பு அவசியம் – என்றார்.