இலங்கை

சினிமாவை மிஞ்சிய சம்பவம்; 80 குழந்தைகளைக் கடத்தி விற்ற பெண்; பகீர் தகவல்

Published

on

சினிமாவை மிஞ்சிய சம்பவம்; 80 குழந்தைகளைக் கடத்தி விற்ற பெண்; பகீர் தகவல்

இந்தியாவின் ஆந்திராவில் பெண் ஒருவர் 80 குழந்தைகளை கடத்தி விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொலிஸ் விசாரணையில், கருத்தரிப்பு மையத்தில் குழந்தை கடத்தும் கும்பலுடன் சேர்ந்து மொத்தம் 80 குழந்தைகளைக் கடத்தி வந்து குழந்தை இல்லாத தம்பதிக்கு விற்பனை செய்தமை தெரியவந்ததாகவும் கூறப்படுகின்றது.

Advertisement

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

ஆந்திர மாநிலம், விஜயவாடாவை சேர்ந்தவர் நம்ரதா. இவர் விஜயவாடா, ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களில் கருத்தரிப்பு மையங்களை நடத்தி வருகிறார்.

குழந்தை இல்லாத தம்பதிகளிடம் சோதனைக் குழாய் மற்றும் வாடகைத் தாய் மூலம் குழந்தைகளை பெற்றுத் தருவதாக நம்ப வைத்து வாடகைத் தாய் மூலம் குழந்தைகளை பெற்றுக் கொள்ள வலியுறுத்தி வந்தார்.

Advertisement

தம்பதியின் விந்தணு மற்றும் கரு முட்டைகளை சேகரித்து வேறொரு பெண்ணின் வயிற்றில் வளர்க்கப்படுவதாக உறுதியளித்தார்.

இதற்காக தம்பதிகளிடம் ரூ.30 முதல் 40 இலட்சம் வரை வசூல் செய்தார்.

மேலும் வாடகைத் தாய்க்கு உடல்நலம், மருத்துவ செலவுகள், பராமரிப்பு ஊட்டச்சத்து செலவு என 9 மாதங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்து வந்தார்.

Advertisement

கருத்தரிப்பு மையத்தில் கடத்தப்படும் குழந்தைகளை வாடகைத் தாய் முறையில் பெற்றதாகக் கூறி தம்பதியினர் முறைப்பாடு அளித்தனர்.

இது தொடர்பாக பொலிஸார் நம்ரதா உட்பட 8 பேரை கைது செய்தனர். இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

கருத்தரிப்பு மையத்தில் குழந்தை கடத்தும் கும்பலுடன் சேர்ந்து மொத்தம் 80 குழந்தைகளைக் கடத்தி விற்பனை செய்தது தெரியவந்தது.

Advertisement

அதோடு குழந்தை இல்லாத தம்பதிகளிடம் நம்ரதா ரூ. 25 கோடி அளவுக்கு மோசடி செய்துள்ளமையும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதையடுத்து இருவரையும் கைது செய்த பொலிஸார் , நம்ரதா மற்றும் அவரது மகன் ஜெயந்த் கிருஷ்ணாவின் வங்கிக் கணக்குகளை முடக்கி விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version