இலங்கை

ஜனாதிபதி அனுர மற்றும் தமிழ் எம்.பிக்கள் அவசர சந்திப்பு

Published

on

ஜனாதிபதி அனுர மற்றும் தமிழ் எம்.பிக்கள் அவசர சந்திப்பு

 ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க , தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை இன்று (7) அவசரமாகச் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 பேரின் எழுத்து மூலமான அவசர வேண்டுகோளின் பெயரில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

Advertisement

மன்னார் மாவட்டத்தில் அமைக்கப்படும் காற்றாலை மின் கோபுரங்கள் தொடர்பில் தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 பேர் ஒப்பமிட்டு ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கடிதம் தொடர்பில் ஆராயவே இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று மதியம் 2 மணிக்கு நடைபெறவுள்ள இந்த சந்திப்புக்குக் கடிதத்தில் ஒப்பமிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கடித்ததில் ஒப்பமிடாத வடக்கு, கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களும், மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை இந்தச் சந்திப்புக்கு மன்னார் காற்றாலையுடன் தொடர்புடைய திணைக்கள அதிகாரிகளும் அழைக்கப்பட்டுள்ளனர். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version